organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக வேளாண் நுட்பங்கள்

பாரம்பரியம் மற்றும் அங்கக வேளாண்மை

 பாரம்பரிய மற்றும் அங்கக வேளாண்மை இவை இரண்டும் வெவ்வேறு வழக்கங்களை கொண்டவையாகும்.

பாரம்பரிய வேளாண்மை
அங்கக வேளாண்மை
இயற்கையை ஆளும் தன்மையுடையது இயற்கையுடன் இணைந்தது
அத்துமீறல், நிலச் சுரண்டல் கட்டுப்பாடுகள் நிறைந்தது

அங்கக வேளாண்மை, பாரம்பரிய வேளாண்மையிலிருந்து அடிப்படையிலேயே பல மாற்றங்களைக் கொண்டது. அங்கக வேளாண்மை இயற்கையுடன் இணைந்து செயல் படுவதால் இயற்கைச் சூழலுக்கு பாதுகாப்பாக அமைகிறது. அங்கக வேளாண்மையில்

  1. பூச்சிக்கொல்லி முற்றிலும் தவிர்க்கப்படுகிறது
  2. பயிர்சுழற்சி கட்டாயப்படுத்தப்படுகிறது.

ஆயினும் சில உள்ளீடுகள் அனுமதிக்கப்படுகின்றன. பூச்சி இனக்கவர்ச்சிப்பொறி போன்றவை அவசியமாகக் கருதப்படுகிறது.

நவீன வேளாண்மை:
இன்றைய ரசாயன வேளாண் முறையில் அதிக மகசூல் மற்றும் லாபம் இருந்தாலும் அவை பாதகமானது என்பது தவிர்க்க முடியாதது. அவற்றுள் சில,

நிலவளத்தை குறைத்தல் : அதிக ரசாயனங்களை பயன்படுத்துவதாலும், பயிர்சழற்சி செய்யாததாலும், நிலத்தின் ஊட்டச்சத்து அளவு குறைந்து வருகிறது.
ரசாயன உரம் : மண்ணின் இயற்கை தன்மையை அழிக்கும் செயற்கை ரசாயன உரங்களை பயன்படுத்தி மகசூலை அதிகரிக்கின்றனர்
நைட்ரேட் (தழைச்சத்து) அடித்து செல்லப்படுதல் : இரசாயன உரங்களில் இருக்கும் நைட்ரேட் மழையினால் அடித்து செல்லப்பட்டு குடிநீரை அசுத்தப்படுத்துகிறது
மண் அரித்தல் : அதிக மறை ஆழமான உழவு செய்தலினால் மேல்மட்டத்தில் உள்ள மண் அரித்து செல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது
மண் இறுகுதல் : மண்ணின் அமைப்பு மிகவும் சேதம் அடைந்து வருகிறது. டிராக்டர் பயன்படுத்தி உழுவதால் மண்ணின் அமைப்பு மாறி இறுகிய நிலை ஏற்பட்டுவருகிறது
உணவு மாசுபடுதல் : இரசாயனப் பொருட்களால் உணவு மாசுபடுதல் தவிர்க்க முடியாத ஒன்றாகும். இது சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை மிகவும் மாசுபடுத்தப்படுகிறது